சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான புழல் சிறை வார்டன் பேச்சிமுத்து தனது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியைக்கடித்தபோது, லத்தியால் தள்ளி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார்.