தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்: (Industries Manufacturing Essential Commodities)
*மருந்துகள், மருந்துருவாக்கிகள் (Pharmaceuticals), துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, அவற்றின் மூலப்பொருட்களுக்கான கூறுகள் (Raw materials components) மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள்.
*கோழி, செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட உணவு தொடர்பான உணவு பதப்படுத்தும் தொழில்கள். உரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் கூறுகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள்.
*அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள் நிறுவனங்கள், ஏற்றுமதி பொறுப்புறுதிகள் அல்லது ஏற்றுமதி ஆணைகள் (Export Orders) கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை (inputs) உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள் (Vendor units)
*பாதுகாப்புத் துறைக்கு கூறுகள், உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்.
*பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கூறுகளின் உற்பத்தி தொழிற்சாலைகள்
பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்:
*தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries)