தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் - பெற்றோர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் - private schools

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பையும், நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம்
தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம்

By

Published : Jul 8, 2021, 1:17 PM IST

சென்னை:நீதிமன்ற உத்தரவின்படியே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியபோதும், அதனைக்கண்டு கொள்ளாமல் சில தனியார் பள்ளிகள் அதிக அளவிலான கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

இதுதொடர்பாக புகார் அளித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், தேசிய மனித உரிமை ஆணையம் வரை இவ்விவகாரம் சென்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கட்டணம் தொடர்பாக கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதில் முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணம், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு 35 விழுக்காடு கட்டணம், மீதமுள்ள 25 விழுக்காடு கட்டணம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைப் பின்பற்றி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் அலுவலர்களின் உத்தரவைப் பெரிய தனியார் பள்ளிகள் கண்டுகொள்ளாமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கல்வித் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இரண்டு தவணை கட்டணம் வசூல்

விழுப்புரத்தில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், 2020 - 21ஆம் கல்வியாண்டில் இரண்டு தவணை கட்டணங்களையும் ஒரே நேரத்தில் வசூலித்ததாகப் புகார் எழுந்திருந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கல்வித்துறை அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், தேசிய மனித உரிமை ஆணையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோர் அளித்தப் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் வழக்காகப் பதிவு செய்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும், கல்வித் துறை அலுவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details