இதுகுறித்து ரேலா மருத்துவமனை இயக்குநர் ரேலா கூறியதாவது, "கரோனா பாதிப்பாளர்களுக்கு எக்மோ முக்கிய சிகிச்சையாக உள்ளது. கரோனா பாதிப்பால் 100 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலட்டர் மூலம் ஆக்சிஜன் அளித்தாலும் உடல் ஏற்றுக் கொள்ளாததால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க எக்மோ மிஷின் மூலம் நுரையீரலை செயல்பட வைத்து உயிரைக் காப்பாற்றலாம்.
3 விழுக்காடு மக்கள் உயிரிழக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுப்பதில்லை. வெளிநாடுகளில் 80 வயதைக் கடந்தவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிப்பதில்லை. கரோனா சிகிச்சையளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வென்டிலேட்டர் இருக்க வேண்டும். இளம் வயதினரை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்ற வென்டிலேட்டர் சிகிச்சை நல்ல வாய்ப்பாக உள்ளது.