சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பின் மீண்டும் நீட்டிக்கப்படாது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
அதோடு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளன. இதற்காக கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மையங்களும் நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை செயல்படும்.