தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபராதமின்றி தொழில் வரி செலுத்தும் வகையில் கால அவகாசம் நீட்டிப்பு

2021- 2022ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில் வரியினை எந்தவித அபராதமுமின்றி நவம்பர் 1ஆம் தேதிக்குள் செலுத்த மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

அபராதமின்றி தொழில் வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
அபராதமின்றி தொழில் வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

By

Published : Aug 13, 2021, 7:36 AM IST

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அரையாண்டில் 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் தொழிலுக்கு 135 ரூபாய் தொழில் வாரியாக மாநகராட்சி வசூலிக்கிறது.

வரி வசூல்

அதேபோல் 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் தொழிலுக்கு 315 ரூபாயும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரும் தொழிலுக்கு 690 ரூபாயும், 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் தொழிலுக்கு 925 ரூபாயும், 75 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் வரும் தொழிலுக்கு ஆயிரத்து 250 ரூபாய் வரியும் மாநகராட்சி வசூலித்து வருகிறது.

அரசு உத்தரவு

வழக்கமாக ஆண்டின் முதலாம் அரையாண்டிற்கான தொழில் வரியி செப்டம்பர் மாத இறுதிக்குள் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டும், தொழில் பாதிக்கப்பட்டும் இருந்ததால் இந்த வரியை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி 2021 - 2022ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான தொழில் வரியினை குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் எந்த ஒரு அபராதமும் இன்றி நவம்பர் 1ஆம் தேதிக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details