தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர எண்பதாயிரம் பேர் விண்ணப்பம்

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர எண்பதாயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர்

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால நீடிப்பு
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால நீடிப்பு

By

Published : Aug 12, 2022, 10:31 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு , போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கு கடந்த 1 ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து மாணவர்கள் கேட்டுக் கொண்டதால் வரும் 17 ந் தேதி வரையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ நர்சிங் படிப்பானது 25 அரசு கல்லூரிகளில் 2,060 இடங்கள் உள்ளது. சான்றிதழ் படிப்புகளில் 27 கல்லூரிகளில் 8,596 இடங்கள் உள்ளன.

12 ஆம் தேதி மாலை 5 மணி வரையில், 80 ஆயிரத்து 592 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் தகவல் தொகுப்பு கையேடுகளில் வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு பதிலாக 044-28361674, 044-28363822, 044-28364822 , 044-28365822, 044-28366822், 044-28367822, 044-29862046 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலையில் பயிற்சியுடன் புதிய பாடத்திட்டத்திற்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details