சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீ நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கி.மீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கி.மீ நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கி.மீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2-ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.