சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக, அரசுத் தோ்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க 14 ந் தேதி முதல் 30 ந் தேதி வரையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கு இறுதிக் கெடு.. தேர்வுத்துறை அதிரடி உத்தரவு! - Tamil nadu teachers exam
பொதுத்தேர்வெழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Etv Bharat
ஆனால் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெயர் விபரங்களை திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். எனவே டிசம்பர் 12 ந் தேதி வரையில் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே கடைசி வாய்ப்பாகும். பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களில், தவறு ஏதும் நிகழாமல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.