தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு? - chennai district news

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஆரம்ப வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 3) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கால நீட்டிப்பு வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

extension-of-time-for-private-school-student-admission
extension-of-time-for-private-school-student-admission

By

Published : Aug 2, 2021, 1:48 PM IST

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 2021-22ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 5ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை rte.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து ஏழு ஆயிரத்து 992 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுவருகிறது. ஆனால் கரோனா தொற்றின் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் எல்கேஜி வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோரிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.

இதனால் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் 65 ஆயிரத்து 797 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்தத் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நாளை (ஆக. 3) கடைசி நாளாகும்.

எனவே மாணவர்களைச் சேர்க்க விரும்பும் பெற்றோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மேலும் 10 நாள்கள் கால நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வித் துறைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: ’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details