சென்னை:முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட்2023 ) ஆன்லைன் மூலம் வரும் 28 ந் தேதி வரையில் விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுகலை தொழிற் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வினை எழுதுவதற்கு இதுவரையில் சுமார் 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட்2023) பிப்ரவரி 1 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கு கட்டணமாக MCA, MBA படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 25ந் தேதி நடைபெறுகிறது.