சென்னை:பொருளாதாரத்தில் நலிந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரையான கல்விக் கட்டணங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.
அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத்திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 37 இடங்களுக்கு, 16ஆம் தேதி வரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் விண்ணப்பம் செய்வதற்கு 18ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த தகவல்களை 14417 என்ற கட்டணமில்லா எண்ணிலும், rtetnqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேர்விற்கு மினி ஜெராக்ஸ் எடுக்கச்சென்ற மாணவர்கள் - எச்சரித்து அனுப்பிய தேர்வு கண்காணிப்பு அலுவலர்