தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 11, 2021, 9:23 PM IST

ETV Bharat / state

தேர்வு கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 18ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Extension of payment of examination fees: Notice of the State Examination Department
Extension of payment of examination fees: Notice of the State Examination Department

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “2020 - 21ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மாணவர்களின் விபரங்களை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தையும் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களின் பதிவு எண் கொண்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதயும் படிங்க: தூத்துக்குடியில் போலி வைரத்தை விற்க முயன்றவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details