சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகத் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள மேற்கு, மத்திய மண்டலங்களில் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நேற்று (ஜூன் 22) உத்தரவிட்டுள்ளது. அதன்படி நுகர்வோர்கள் ஜூன், 2019இல் எவ்வளவு தொகையை மின் கட்டணமாகச் செலுத்தினார்களோ, அதே கட்டணத்தையே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.