தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பான் - ஆதார் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு! - 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

பான் கார்டுடன், ஆதாரை இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி தான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு டிசம்பர் 31ஆம் தேதி வரை அதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

aadhaar-merging-with-pan-

By

Published : Sep 29, 2019, 11:37 AM IST

வருமான வரி எண்ணுடன், ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜீலை 1ஆம் தேதி சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது என எச்சரித்து இருந்தது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் திட்டம் சட்டப்படி செல்லும் என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது. மேலும்,வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், இந்த ஆதார்-பான் இணைப்பதற்காக பல முறை அரசு கால அவகாசம் கொடுத்தது. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மக்கள் பான் கார்டுடன், ஆதாரை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில்,செப்டம்பர் 30ஆம் தேதி தான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31ஆம் தேதி வரை பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க 30ஆம் தேதி கடைசி; இணைக்கத் தவறினால்...?

ABOUT THE AUTHOR

...view details