தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இன்னும் பெயர் சேர்க்கவில்லையா?' - உங்களுக்கான அரசின் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு
தமிழ்நாடு அரசு

By

Published : Dec 11, 2020, 2:09 AM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.இந்த பிறப்பு சான்றிதழ்தான் மற்ற சான்றிதழ்கள் பெறுவதற்கு இன்றிமையாத ஒன்றாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அடுத்த 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்துகொள்ளலாம். அப்படி இல்லையென்றால் 15 வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை,பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000 இன் படி 1.1.2000 க்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதை தவற விட்டவர்கள்களுக்காக,மேற்கண்ட கால அளவு முடிவுற்ற பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிவுற்ற நிலையில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது. இதை களைந்திட, 1.1.2000க்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்தப் பின் சம்மந்தப்பட்ட பிறப்பு , இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களின் வழங்கிட இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிடுவீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details