சென்னை:நடப்பு ஆண்டின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றைய முன்தினம் (அக்.9) தொடங்கிய நிலையில், இன்றுடன் (அக்.11) முடிவடைகிறது. இந்த நிலையில், கேள்வி பதில் நேரம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெற்று வந்தது. இதனிடையே, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும், அது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் என்பதை தான் மறுக்கவில்லை எனவும் அப்பாவு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர், அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.