தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி குறித்த அவதூறு: விளக்கமளித்த மன்ற முன்னாள் நிர்வாகி - Explanation by Sudhakar

ரஜினிகாந்த் குறித்த அவதூறுகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 13, 2022, 6:02 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர், சுதாகர். நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவது இல்லை என்று அறிவித்தார். இச்செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், தனது மக்கள் மன்றத்தை ரசிகர் மன்றமாக மாற்றிவிட்டார்.

இந்நிலையில், சுதாகர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் சுதாகர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையிலும் ரஜினிகாந்த் அவருக்கு உதவவில்லை என்று தகவல் பரவி வந்தது.

இதனையடுத்து இதுகுறித்து சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'தலைவர் ரஜினிகாந்தின் அபரிவிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரசாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச்செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக்கொண்டவர், தலைவர்.

இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக, எங்கள் முழுக் குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரசாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத்தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள்.

தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காளிகாம்பாள் கோயிலில் ஹன்சிகா; இயக்குநருடன் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details