சென்னை: உலக குழந்தைகள் தினமான இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் ஒரு மணி நேரம் கேட்ஜெட்களை டிஸ்கனெக்ட் செய்து குழந்தைகளுடன் செலவிடுங்கள் என பேரண்ட் சர்க்கிள் அழைப்பு விடுத்துள்ளது. பேரண்ட் சர்க்கிள் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நளினா ராமலஷ்மி கூறும்போது,
”உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20-ம் தேதி (இன்று) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் கேட்ஜெட்களை டிஸ்கனெக்ட் செய்து குழந்தைகளுடன், விளையாடுவது, பேசுவது , சாப்பிடுவது , ஒன்றாகச் சிரிப்பது, மகிழ்ச்சியை வேடிக்கையான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
புதுச்சேரி அரசும் ’GadgetFreeHour’ முயற்சியில் நம்முடன் கைகோர்த்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விழிப்புணர்வை கொண்டு செல்ல உள்ளது. குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாத நிலையினை கேட்ஜெட்டுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கும்.
பெற்றோர்களுக்கு வல்லுநர்களின் அட்வைஸ் குழந்தைகளுடன் உறவை வளர்ப்பதே வெற்றிகரமான குழந்தை வளர்ப்புக்கு முக்கியமானது. இதற்காக பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலிவிட வேண்டும். பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் வகையில் கேட்ஜெடடுகள் ப்ரீ திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க:அதிக நேரம் ஸ்கூலில் இருந்தால் கிட்டப்பார்வை குறைபாடு வர வாய்ப்பா?