சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் தனது நண்பர் பாலா என்பவரின் விலை உயர்ந்த காரில் மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காக கூடுவாஞ்சேரி சென்றுவிட்டு காரில் நேற்றிரவு (டிச. 02) தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பெருங்களத்தூர் அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்தது. உடனடியாக குமார் காரிலிருந்து இறங்கிப் பார்த்தபோது, சில நிமிடத்தில் காரில் புகை வந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.