தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலக்களிக்கவா சட்டங்கள்? - ஈஷா வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி - உயர்நீதிமன்றம்

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈஷா வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி
ஈஷா வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி

By

Published : Sep 27, 2022, 4:59 PM IST

Updated : Sep 27, 2022, 5:45 PM IST

சென்னை: கோவையில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை (செப்டம்பர் 28) ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...

Last Updated : Sep 27, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details