இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நமது மருத்துவர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழலால் இறப்புகள் நிகழ்ந்து விடுகின்றன. துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களால் இறப்பு குறித்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம், 1969, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 21 நாள்கள் முடிந்து 30 நாள்கள் வரை காலதாமதம் ஆகும் பட்சத்தில் அதற்கு கட்டணமாக 100 ரூபாயாகவும், 30 நாள்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் 200 ரூபாயாகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் 500 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.