தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக செயற்குழு கூட்டம் 11 மணிக்கு தொடங்குகிறது? - AIADMK committee meeting

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம்

By

Published : Jan 9, 2021, 9:46 AM IST

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (ஜன.9) காலை 9 மணி அளவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு அதிமுகவினர் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் பொதுக்குழு சில மணி நேரங்கள் தாமதமாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் சாதனைகள் குறித்து பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் படி அதிமுக செயற்குழு கூட்டம் 11 மணிக்கு தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலில் எம்பி ரவிக்குமார் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details