முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய துறை உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”- ஷில்பா பிரபாகர் சிறப்பு அலுவலராக நியமனம்! - newstoday
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறைக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்
இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் (மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார். இதற்கான கோப்பில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.