எழும்பூர் தொகுதி உங்களுக்குச் சாதகமாக உள்ளதா, இல்லையா?
தொகுதி நிலவரம் திமுகவிற்குச் சாதகமாகத்தான் உள்ளது. ஏனென்றால், எழும்பூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று அனைவரும் கூறுகின்றனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சி திமுகவிற்குச் சாதகமாகத்தான் உள்ளது. எனவே திமுக பலமாக உள்ளதை உணர்கிறேன்.
இந்தத் தொகுதியின் பிரச்சினைகள் என்னென்ன?
கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், சாலைகள் செப்பனிடப்படவில்லை. குடிநீர் கழிவுநீருடன் கலக்கிறது. இதேபோல், குப்பைகளை முறையாக அகற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மாநகராட்சி மூலம் சரிசெய்வேன்.
திமுகவின் கோட்டையை நீங்கள் தக்கவைப்பீர்களா?
கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஊழல் ஆட்சியைப் பற்றி மக்கள் நன்றாக அறிவார்கள். கரோனா பெருந்தொற்று காலங்களில் இந்தத் தொகுதி மக்கள் பெரும் அவதியடைந்திருக்கிறார்கள் என்பதைத் தொகுதியை வலம் வந்தபோதே நன்கு அறிந்துகொண்டேன். எனவே நிச்சயமாக இந்தத் தொகுதி மக்கள் என்னை சட்டப்பேரவைக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஐந்து முனை போட்டி என்ற கேள்விக்கு,
இந்தத் தேர்தல் நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போர். வாக்கு எண்ணிக்கைப் பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல; பாஜக அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் அதிமுகவிடமிருந்து இழந்த தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதுதான் எங்கள் நோக்கம்.
திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுடன் சிறப்பு நேர்காணல் தற்போது அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பாஜகவின் பிரதிநிதிகளாகத்தான் செயல்படுகின்றனர். மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தத் தொகுதிப் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மக்களுக்கு நன்மை செய்வேன்" என்றார்.
இதையும் படிங்க:பரப்புரை செல்லும் இடமெல்லாம் அமைச்சர் கண்ணீர்