தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த வைரஸூக்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மனநல மருத்துவர் சிவபாலன் ஈடிவி பாரத் தமிழ் செய்தியாளரின் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:
கேள்வி : கரோனா சிகிச்சையிலிருக்கும் போது இளைஞர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
பதில் : ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவரது பெயர் அவரின் வீடு, தெருவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் என பதாகைகளில் ஒட்டப்படுகிறது. அவரை மருத்துவமனையில் வந்து சந்திக்க யாரையும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு பல வகையில் கரோனா நோயாளிகள் மன அழுத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதில் குறிப்பாக இளைஞர்கள் தனிமையை கண்டு மிகவும் அச்சமடைகின்றனர்.
கேள்வி : கரோனா நோயளிகள் தற்கொலைக்கு முயற்சிப்பதை எவ்வாறு தடுக்கலாம்?
பதில் :கரோனா உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் தனிமையிலிருக்கும் போதும்,கரோனாவால் உயிரிழப்பவர்களை நேரில் பார்க்கும் போதும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தனக்கும் இவ்வாறு ஏற்படும் என எண்ணி பெரும்பாலான இளைஞர்கள் தற்கொலைக்கும் முயல்கின்றனர்.
அவர்கள் அப்படி நினைக்க கூடாது. அவருக்கு மட்டுமே ஏற்பட்ட பிரச்சினை இல்லை கரோனா தாக்கம். உலகம் முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பதை எண்ணிக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்றிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும். எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்களை முழுமையாக பின்பற்றலாம் என்பது குறித்து அவர்கள் சிந்திக்க தொடங்க வேண்டும். பொதுவாக பாதிப்பிலிருந்து மீள்வதில் சிந்தித்தலே சிறந்தது எனத் தெரிவித்தார்.
மனநல மருத்துவர் பிரத்யேகப் பேட்டி கேள்வி: ஊரடங்கில் குடும்ப வன்முறையை தவிர்க்க என்ன செய்யலாம்?
பதில் :குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கமல் இருக்க தற்போது உள்ள நிலை நிரந்தரமானது அல்ல என்பதையும், மீண்டும் எல்லாம் மாறும் என்பதையும் மக்கள் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும். மனம்விட்டு பேச வேண்டும். அவ்வப்போது பேசுவதினால் சகஜமான நிலையிலிருக்க கூடிய நிலை உருவாகும். தனிமையிலேயே இருப்பதால்தான் அனைவரும் குழப்பான, கவலையான நிலையிலிருக்கின்றனர். அதனால் குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசினாலே போதும்.
கேள்வி : இது போன்ற சூழ்நிலையில் ஏற்படும் மன அழுத்ததிலிருந்து எவ்வாறு மீளலாம்?
பதில்: மன அழுத்தத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு வழக்கமான அறிவுரைகள் வழங்குவதை தவிர்த்து அவர்களிடம் நன்றாக பேச வேண்டும். ஒன்றும் இல்லை. இது உனக்கு மட்டுமே ஏற்பட்ட பிரச்சினை இல்லை என பொதுவான அறிவுரைகள் வழங்காமல். அவர்களை பேச விட வேண்டும். அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதன்பின் அதற்கு அறிவுரைகள் வழங்கலாம்.
இவ்வாறு ஈடிவி பாரத் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க:கரோனாவால் தள்ளிப் போகும் பொதுத்தேர்வுகள்; என்ன செய்கிறார்கள் போட்டித் தேர்வர்கள்?