ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம், கொகேணட்டாம்பேட்டைதான் பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர். இந்தக் கிராமத்தில் சாம்பமூர்த்தி-சகுந்தலா தம்பதியருக்கு தலைமகனாக 1946ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தார். இவர்களின் குலதெய்வம் முருகன் என்பதால் இவருக்கு பாலசுப்பிரமணியம் எனப் பெயரிடப்பட்டது.
தொடக்கக் கல்வியை நகரியில் படித்த இவர், தனது மேல்நிலை படிப்பைக் காளாஸ்திரியில் முடித்தார். இதனையடுத்து, தனது பொறியியல் பட்டப் படிப்பை அனந்தபூரில் தொடங்கினார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு படிப்பைத் தொடர முடியாததால், 1969ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தார். இவருடைய திரையுலக இசைப்பயணம் குறித்து ஈடிவி பாரத் சார்பில் அவருடைய சகோதரர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
”கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் வந்ததால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இசையுலகத்தில் அடியெடுத்து வைத்தார். தமிழ் திரையுலகில் அவர் பாடிய முதல் பாடல் வந்த படம் ’குழந்தை உள்ளம்’. இந்தப் படத்தையடுத்து சாந்தி நிலையம், அடிமைப்பெண் ஆகிய படங்களில் பாடினார்.
ஆனால், முதலில் வெளியே வந்த படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல், அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. அன்று தொடங்கிய அவரது திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, மராட்டி உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 42,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த பின்னணிப் பாடகர் என்றால் அது ரவிதான். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகர் ரவியை தனது காட்ஃபாதராகவே நினைத்திருந்தார். அவரது பாடல்களை இரவில் கேட்டு, பாடி மகிழ்வார்”என்றார்.
”ஆரம்ப காலங்களில் அதிக அளவில் திரைப்படங்களை பார்ப்பதில்தான் எஸ்பி.பாலசுப்ரமணியமுக்கு விருப்பம் அதிகம். கேசினோ, சத்தியம், தேவி, சபையர் ஆகிய திரையரங்குகளில் செகண்ட் ஷோ படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆங்கிலம் முதல் அனைத்து மொழிப் படங்களையும் திரைக்கு வந்த உடனே பார்க்கும் வழக்கம் அவருக்கு உண்டு” எனவும் சிவக்குமார் தெரிவிக்கிறார்.
எஸ்பிபியின் விருப்பங்கள்