தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூவம் ஆற்றில் குத்தாட்டம்: 1 கி.மீ. நீந்திச்சென்ற மதுப்பிரியரால் பரபரப்பு! - காவல்துறை விசாரணை

சென்னை: புதுப்பேட்டை அருகே மதுபோதையிலிருந்த இளைஞர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்த குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

excitement-by-the-youth-jumped-into-the-river-koovam-and-took-a-bath-under-the-influence-of-alcohol
excitement-by-the-youth-jumped-into-the-river-koovam-and-took-a-bath-under-the-influence-of-alcohol

By

Published : Sep 16, 2020, 9:49 PM IST

சென்னை புதுப்பேட்டை பாலத்திலிருந்து இன்று (செப்.16) மாலை மதுபோதையிலிருந்த இளைஞர் ஒருவர் கூவம் ஆற்றில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர், அந்த இளைஞரை மீட்க முற்பட்டபோது, அவர் கூவம் ஆற்றில் குதித்து குதித்து நீந்திச் சென்றார்.

இதனை வேடிக்கைப் பார்க்க அந்தப் பகுதி மக்கள் கூடியதால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அந்த இளைஞரை கரைக்கு வரும்படி கேட்டனர். ஆனால் அந்த இளைஞர் நீந்தியபடியே சுமார் ஒரு கி.மீ. தூரம் சென்றார்.

மதுபோதையில் கூவம் ஆற்றில் குதித்து குளியல் போட்ட இளைஞரால் பரபரப்பு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், இளைஞரை மீட்டு கரைக்கு அழைத்துவந்தனர். பின் அந்த இளைஞரை கைதுசெய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கேரளாவிற்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details