தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த கைதியால் பரபரப்பு

நீதிமன்ற வளாகத்தில், கைதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயங்கி விழுந்த கைதியால் பரபரப்பு-
மயங்கி விழுந்த கைதியால் பரபரப்பு-

By

Published : Mar 10, 2021, 3:06 PM IST

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு சட்ட விரோதமாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் முருகன் என்ற பெயரில் குமரன் என்பவர் ஊடுருவியுள்ளர். இவர், அங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, கியூ பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

பின்னர், அவரை சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைத்தனர். சட்டவிரோதமாக உள்நுழைந்தது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெனீதா முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அவரை காவல்துறையினர் புழல் சிறையில் இருந்து அழைத்து வந்தனர். ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் அவர், திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருடன் வந்த காவலர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனையும் படிங்க:வாகனச் சோதனையில் சிக்கிய வெள்ளிக் கட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details