கடந்த மூன்று நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக சென்னையின் குடிநீர் வழங்கல் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகியவை நிறைந்துவருகின்றன. இதனால் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரிநீரை வெளியேற்றிவருகின்றனர். வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12ஆம் தேதிவரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பொதுப்பணித் துறை அலுவலர் கூறுகையில், "புழல் ஏரியிலிருந்து இன்று வினாடிக்கு 368 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரத்து 150 கனஅடி நீரும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாயிரத்து 997 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.