கரோனா வைரஸ் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கடந்த 16ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா எதிரொலி: பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - exams cancelled for tenth students
சென்னை: கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை
இந்நிலையில், பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பியிருந்தனர். இதை ஏற்று இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது என்றும் தமிழ்ப் புத்தாண்டு முடிந்த பிறகு 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.