தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Anna University Examination: அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு! - அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும்

Anna University Examination: அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடப்பிரிவில் சிலவற்றை மூடிவிட்டு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவுள்ளதாகவும் மாணவர்களுக்கு நேரடியாகத் தேர்வு நடத்தப்படும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி
துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி

By

Published : Jan 7, 2022, 4:49 PM IST

Anna University Examination: அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கான ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மையம் - அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் மையம் ஆகியவற்றுக்கும் இடையே துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், "அண்ணா பல்கலைக்கழகம் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன்மூலம் தாெழில்முனைவோர்கள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் வேலைத் தேடிச் செல்வார்கள்.

அதற்கான தகதியைத்தான் பல்கலைக்கழகம் செய்தது. ஆனால் அந்த முயற்சியில் பல்கலைக்கழகம் வெற்றி பெறவில்லை. 40 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அந்தத்துறையில் வேலைக் கிடைத்து சென்றனர்.

60 விழுக்காடு மாணவர்கள் வேலையும் கிடைக்காமல், தொழிலும் தொடங்கத் தெரியாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிகளவில் தொழில்முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள்.

துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

பொருளாதார வளர்ச்சி

இதற்கான சூழ்நிலையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற முடியும். பல்கலைக்கழகத்தின் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்குத் தேவையான முறையில் அளித்து, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்.

மாணவர்கள் தொழில் அதிபர்களாக வருவதற்கு அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் நடத்திவரும் சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் படிக்கும்போதே கூடுலாகப் படிக்கலாம். இதனால் மாணவர்களுக்குத் தொழில் அதிபராக வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

வேலைவாய்ப்பு

பொறியியல் முதுகலைப் பாடப்பிரிவினைப் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 5 எண்ணிக்கைக்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்த பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாடப்பிரிவுகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளோம்.

பொங்கல் விடுமுறை

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளிலிருந்து மாணவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 21ஆம் தேதிக்குப் பிறகு மாணவர்களுக்கு நேரடியாக இறுதி ஆண்டு தேர்வு நடத்தவுள்ளோம். முதுகலைப் படிப்பிற்கு வரும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் வரக்கூடாது.

எனவே ஒருமுறையாவது நேரடியாகத் தேர்வு எழுத வேண்டும் என அரசும், பல்கலைக்கழகமும் விரும்புகிறது. மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடந்து-கொண்டிருக்கும்போதே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகள் முடிந்த பின்னர் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு பணியிடங்கள் தமிழர்களுக்கே -பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details