தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Teacher Selection Board Announcement

சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு மையம், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹால் டிக்கெட் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

beo_exam_center_hall_ticket
வட்டார கல்வி அலுவலர் மையத்துடன்ஹால் டிக்கெட்

By

Published : Feb 11, 2020, 8:10 AM IST

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2018-19 ஆண்டில் வட்டார கல்வி அலுவலருக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு உரிய அனுமதி சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

கடந்த 7ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் மட்டுமே அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு, 3 நாள்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுள் பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே அவர்களது சொந்த மாவட்டத்தில் தேர்வெழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்விற்கு விண்ணப்பித்த 64,000 தேர்வர்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் வேறு மாவட்டத்திற்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details