தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு நாளை கம்பியூட்டர் தேர்வு - ரவிக்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக தமிழ் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 4ஆம் தேதி கம்பியூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 3, 2023, 11:02 PM IST

சென்னை:இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகங்கள் மற்றும் மண்டல வளாகங்களுக்கான தமிழ் ஆசிரியர்களுக்காக (தற்காலிகம்) சமர்ப்பிக்கப்பட்ட உங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, தேர்வில் (கணினி அடிப்படையிலான) பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு பிப்.4ஆம் தேதியன்று விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு வினாத்தாள் விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான (Objective Type) மற்றும் ஒவ்வொரு கேள்வியும் ஒரு மதிப்பெண் கொண்ட 60 வினாக்கள் (Multiple Choice Questions) இருக்கும். அவற்றில் ஏதேனும் 45 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

ஒவ்வொரு நான்கு தவறான விடைகளுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். (ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 மதிப்பெண்). 45க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டால், பதிலளிக்கப்பட்ட கேள்விகளில் முதல் 45 கேள்விகளுக்கு மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். தேர்விற்கான பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வானது, விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளின் எண்ணிக்கையின்படி 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு தேர்வர்களை சுருக்கமாகப் பட்டியிலிடுவதற்காக மட்டுமே. நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் அதே நாளில் தேர்வு மையத்திற்கு வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். மேலும் நேர்காணலின் மதிப்பீட்டில், இந்த தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்தவித பங்களிப்பும் அளிக்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுத்தல் நேர்காணல் செயல்திறன் அடிப்படையிலேயே இருக்கும்.

நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு நேர்காணல் தேதி குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழ்களையும் மற்றும் ஆதார் அடையாள அட்டையையும் தேர்வு மையத்தில் சரிபார்ப்பிற்க்காக சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்வின் போது துணை எழுத்தர் தேவைப்படும் பட்சத்தில் மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் கடைசி தொகுப்பில் (தொகுதி-IV- 3.00 p.m to 6.00 p.m) அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண்கள் உடனே அறிவிக்கப்படும் மற்றும் அதில் விண்ணப்பதாரர்கள் கையொப்பம் இட கேட்டுக்கொள்ளப்படுவார்கள். தேர்வுக்கான தகவல் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற தேர்வர்கள், கீழ்க்கண்டவாறு பதில் மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். நாளை (பிப்.04) அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேர்விற்கான அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் எனக்கு கிடைத்துள்ளது" பதில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய ( முகவரி tamilautf2023@gmail.com ) எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐஐடியின் பிஎஸ் படிப்புக்கு கல்வி உதவித்தொகை - கார்கில் நிறுவனம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details