தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2021, 3:56 PM IST

Updated : Jul 16, 2021, 5:49 PM IST

ETV Bharat / state

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியீடு

15:53 July 16

ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்

சென்னை:பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020-2021ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள், ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியினை பதிவுசெய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள்

tnresults.nic.in

dge.tn.gov.in

dge1.tn.nic.in

dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என அறிவித்துள்ளது. 

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பிவைக்கப்படும். 

மேலும், பள்ளி மாணவர்கள் ஜூலை 22ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in,  www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவுசெய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.

அனைவரும் தேர்ச்சி 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக 2020-21ஆம் கல்வி ஆண்டில் படித்த 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடத்துவதற்குத் தேர்வுத் துறை தயாரானது. ஆனால், கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

ஆய்வுசெய்த ஸ்டாலின் 

மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுக் குழுவையும் நியமித்தார். அந்தக் குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் வழங்கியது. அதனை ஆய்வுசெய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய வழிமுறைகளை வெளியிட்டார். 

+2 மதிப்பெண் வழங்கும் முறை

மதிப்பெண் வழங்கும் வழிமுறை: 

  • பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 
  • 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து முறை மதிப்பெண்ணில் மட்டும் 20 விழுக்காடு, 
  • 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு / அக மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும், கடந்தாண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு

Last Updated : Jul 16, 2021, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details