தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை - Exam holiday

தமிழ்நாட்டில் செய்முறைத் தேர்வு அல்லாத பிரிவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.17) முதல் தேர்வுக்கு முந்தைய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை!

By

Published : Apr 17, 2021, 9:37 AM IST

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.17) முதல் தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படாது என்றும், செய்முறைத் தேர்வுகள் உள்ள மாணவர்கள் மட்டும் அந்தந்த நாள்களில் பள்ளிகளுக்கு வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்!

ABOUT THE AUTHOR

...view details