சென்னை:பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு 2019இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தாரர்கள் 2020 ஜனவரி 22ஆம் தேதிமுதல் பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம்செய்ய பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.