சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த மே 28ஆம் தேதி துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டன் முன்பிணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிடிபட்ட மணிகண்டன்
இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் இன்று (ஜுன் 20) அதிகாலை பெங்களூருவில் கைது செய்தனர்.