சென்னை: 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி் கையெழுத்திட்டார். ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும், நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும் ஜெயக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே.16) ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும். தன்னிடம் கேட்கக்கூடாது. தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என ஆவேசமாகத் தெரிவித்தார்.