தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைவியில் உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - தலைவியில் உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளது

திமுக செய்த தொல்லைகள் பற்றி காட்சி வைக்கப்படவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டும் என கூறிய அவர், எங்கள் ஆட்சி காலத்தில் இந்த படம் திரைக்கு வந்திருந்தால் திமுகவின் தொல்லைகள் சரியாக காட்டப்பட்டிருக்கும் என கூறினார்.

jayakumar
jayakumar

By

Published : Sep 10, 2021, 7:53 PM IST

Updated : Sep 10, 2021, 8:47 PM IST

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் 'தலைவி' படம் எடுக்கப்பட்டிருந்தால் காட்சியமைப்புகள் இன்னும் சிறப்பாகவும், உண்மைத் தன்மையுடனும் அமைந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

தலைவி திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைவி திரைப்படம் பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்த திரைப்பட குழுவை பொறுத்தவரை வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த படத்தினை பார்க்கும்போது ஆணாதிக்கம் உள்ள சமூகத்தில், தடைகளை உடைத்து பெண்கள் வர முடியும் என்ற ஆற்றல் அனைத்து பெண்களுக்கும் வரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர். பொறுத்தவரை என்றுமே பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. அவர் குண்டடிபட்டு கிடந்தபோது, ஒரு போஸ்டர் தான் பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது.அண்ணா மறைவிற்கு பிறகு கருணாநிதி பெயரை முன்மொழிந்தது எம்.ஜி.ஆர் தான். ஆனால், இந்த படத்தில் எம்ஜிஆர் பதவி கேட்டதுபோல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.திமுக செய்த தொல்லைகள் பற்றி காட்சி வைக்கப்படவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டும் என கூறிய அவர், எங்கள் ஆட்சி காலத்தில் இந்த படம் திரைக்கு வந்திருந்தால் திமுகவின் தொல்லைகள் சரியாக காட்டப்பட்டிருக்கும் என கூறினார்.
Last Updated : Sep 10, 2021, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details