தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியர் கைது - two wheeler theft

ஆவடி அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னாள் அரசு ஊழியர் கைது
முன்னாள் அரசு ஊழியர் கைது

By

Published : Dec 21, 2021, 10:19 AM IST

சென்னை: ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இருசக்கர வாகனங்கள் திருடு போன இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பருத்திப்பட்டு சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணை போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன் (38) என்றும், கண்காணிப்பு கேமராவில் பதிவானது இவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகனங்களை திருடுவதும், குறிப்பாக அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் சாவியுடன் விட்டு சென்றவர்களின் வாகனங்களை மட்டுமே தமிழ்ச்செல்வன் திருடுவது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த 11 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அரசு துறையில் ஊழியராக பணியாற்றிய அவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதையும் படிங்க:குட்கா, கஞ்சா தடுப்பு நடவடிக்கை: தமிழ்நாடு முழுவதும் 5,342 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details