சென்னை புழல் கேம்ப் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (84). இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தேவராஜ் இருதய நோய் காரணமாக அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆவடியில் உள்ள ராணுவ துறை கேண்டினில் பொருட்களை வாங்க வந்துள்ளார்.
பின்னர் அவர் செங்குன்றம் செல்லும் மாநகரப் பேருந்தில் (தடம் எண். 62) பயணம் செய்துள்ளார். இந்த பேருந்து அம்பத்தூர் ராம் நகர் பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது தேவராஜ் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.