சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரை முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் உள்ளிட்ட சிலர் மிகக்கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து எஸ்.எஸ். கண்ணன் தலைமறைவானார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.கண்ணனை தி.நகரில் சிந்தாரிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக திருவல்லிக்கேணி வட்டச் செயலாளராக இருந்த கண்ணன், சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற கல்லூரி மாணவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் ஏமாற்றியதால் எஸ்.எஸ்.கண்ணன், அவரது மகன் கவித்திறன் ஆகியோரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் அதனால் எஸ்.எஸ்.கண்ணனின் திமுக வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ஆடம்பர வாழ்க்கை மோகம் - திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவி !