தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் அவதூறு பரப்புகின்றனர் - அதிருப்தி திமுக எம்எல்ஏ புகார்! - KuKa Selvam complaints to Police Commissioner

சென்னை : போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்புவதாக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ex-dmk-mla-kuka-selvam-gave-petition-to-police-commissioner
ex-dmk-mla-kuka-selvam-gave-petition-to-police-commissioner

By

Published : Sep 1, 2020, 9:33 PM IST

சமீபத்தில் திமுகவிலிருந்து ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதி எல்எல்ஏ கு.க.செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து கருத்துக்கள் வெளியானது.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கு.க.செல்வம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''தனது ட்விட்டர் கணக்கு போலவே போலியாக மூன்று கணக்குகள் உள்ளன. அவற்றை உருவாக்கியவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி செயலர் உதயநிதி ஆகியோர் குறித்து கீழ்த்தரமாக நான் பதிவிடுவதுபோல் பதிவிட்டு வருகின்றனர். இந்த ட்விட்டர் பக்கத்தை தவிர்த்து போலியாக இயங்கி வரும் பக்கங்களை அறிந்து முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் பாஜகவில் இணைவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சட்டப்பேரவையில் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது' - கு.க. செல்வம்

ABOUT THE AUTHOR

...view details