தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழப்பு! - Nungambakkam Car Accident

சென்னை: நுங்கம்பாக்கம் அருகே குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ex-armyman Died in an Car Accident
ex-armyman Died in an Car Accident

By

Published : Dec 27, 2019, 5:15 PM IST

வேலூர் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார்சாமி (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் வாரியத்தில் காவலாளியாகப் பணியாற்றினார்.

இன்று காலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையை மன்னார்சாமி கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்களால் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

கார் விபத்தில் பலியான ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். இந்த விசாரணையில், அதிவேகமாகக் காரை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்தியது அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிரண்ராஜா (23) என்ற இளைஞர் எனத் தெரியவந்தது.

இவர் குடிபோதையில் காரை ஓட்டியது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கிரண்ராஜாவை கைதுசெய்து, கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து பாண்டி பஜார் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ’எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details