தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தற்போதைய பணி நியமனங்களில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது' - ரேகிங் தடுப்பு நடவடிக்கைகள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் தற்போதைய பணி நியமனங்களில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

EWS
EWS

By

Published : Nov 11, 2022, 5:12 PM IST

சென்னை: உயர்கல்வி இணை இயக்குநர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடந்த ஆண்டைவிட 10,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிகள் தற்போது வெளியாகி உள்ளதால், நவம்பர் 18ஆம் தேதி வரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் பி.ஹெச்.டி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநில கல்லூரியில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எம்.காம் முதுகலைப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கட்டாமல் விடப்பட்ட 13 கல்லூரிகளில் 8 கல்லூரிகளுக்கான கட்டடப்பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக அரசு அறிவித்தபடி 20 கல்லூரிகளில் 9 கல்லூரிக்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகள் உருவாவதால், அதற்கு 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவுள்ளது. இதில், 10% இட ஒதுக்கீடு திமுக சார்பில் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. இப்போது நியமனம் செய்யும் பணிகளில் 10% இட ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது.

ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16ஆம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக எலிக்காய்ச்சலை கண்டறிய ஆய்வகம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details