தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - congress

சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

By

Published : Aug 27, 2019, 3:48 AM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,

“நாட்டிலே இன்றைக்கு பொருளாதாரம் நசுக்கி கொண்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும், பழி வாங்க வேண்டும் என்கிற காரணத்தால் தான் சிதம்பரத்தை கைது செய்து மோடி கேடி வேலைகளை செய்து வருகிறார்.

இன்றைக்கு பல பெரிய கம்பெனிகள் மூடும் நிலைக்கு வந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பால் விலை மாநில அரசால் ஆறு ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கீழே நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார மேன்மைக்கு ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் மற்றும் சிதம்பரம் ஆகிய நான்கு பேர் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது, என்றார்.

மேலும், நாட்டின் நீதித்துறையே மோடி, அமித் ஷா பேச்சைக் கேட்டு செயல்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details