சென்னை: சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்.,27ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தில் இருந்து ஒருவர் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகவும், அதனால் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்குவதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்திருந்தார்.
Erode by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளருக்கான நேர்காணல் இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில் காங்.,மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக காங்., மேலிடம் அறிவித்துள்ளது.
Erode by election: ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு
காங்., தரப்பில் இருந்து மேலும் சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் வேட்பாளருக்கான நேர்காணல் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருமகன் ஈவேரா-வின் தந்தையும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுமதித்துள்ளதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாய்ப்பளிக்க ஜி.ராஜன் கண்ணீர் மல்க கோரிக்கை