தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவக் குற்றங்களை தடுக்க மசோதா நிறைவேற்றிடுக... எவிடன்ஸ் கதிர்.. - தீர்ப்பு

சென்னை கீழ்பாக்கத்தில் ஆணவக் குற்றங்கள் தடுப்பு வரைவு 2022 என்ற தலைப்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

எவிடன்ஸ் கதிர்
எவிடன்ஸ் கதிர்

By

Published : Mar 25, 2023, 7:16 PM IST

சென்னை:சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆணவக் குற்றங்கள் தடுப்பு வரைவு 2022 என்ற தலைப்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை எவிடன்ஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி ஆணைய துணைத் தலைவர் புனிதபாண்டியன், தேசிய தலித் மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சுளா பிரதீப் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய எவிடன்ஸ் அமைப்பின் தலைவர் எவிடன்ஸ் கதிர், "எவிடன்ஸ் அமைப்பு கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஆணவக் குற்றங்களை தடுப்பதற்கு என்று சட்ட ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் தமிழ்நாட்டினை கடந்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெறக்கூடிய ஆணவக் குற்றங்களுக்கு எதிராகவும் பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.இது மட்டுமின்றி தேசிய அளவிலான தலித் மனித உரிமை காப்பாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக ஆணவக் குற்றங்களை தடுப்பதற்கு என்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரப்புரையினை எவிடன்ஸ் அமைப்பு தலைமையேற்று நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

குறிப்பாக ஆவண குற்றங்களை தடுப்பதற்கென்று வரைவு ஒன்றினை தயாரிக்கும் பணியிலும் மேலும் இக்குற்றங்கள் குறித்து தேசிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றினை அறிக்கையாக தொகுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இறுதியாக, 'திருமணத்திற்கான சுதந்திரம் மற்றும் இணைவு, கவுரவம் என்கிற பெயரில் குற்றங்கள் தடுக்கும் மசோதா 2022' என்கிற பெயரில் வரைவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவினை பாராளுமன்றத்தில் விவாதமாக எடுத்துச் செல்லப்பட்டு சட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாதிரி வரைவினை வழங்கியும் இருக்கின்றோம் என்றார். தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவப் படுகொலை அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையில் ஒரே சமூகத்தில் காதல் திருமணம் செய்யும் காதலர்களை படுகொலை செய்தால் அதுவும் ஆணவ கொலையிலே அடங்கம் என்றார். இது குறித்து அவரின் அமைப்பு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மத்திய அரசும் மாநில அரசும் இதற்கு விரைவில் ஒரு சட்ட மசோதா கொண்டு வரும் என நம்புகிறேன்" ஆனால் அரசு சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு ஆணவ கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில் ஆணவப் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும் இதற்கான கலந்தாய்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details