தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அரசு பள்ளியைத் தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன் - ஆரி அர்ஜுணன் பேச்சு

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைவதற்கு முயற்சி செய்வேன் என பிக் பாஸ் ஆரி அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

’அரசு பள்ளியைத்  தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன்
’அரசு பள்ளியைத் தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன்

By

Published : May 30, 2022, 7:49 AM IST

சென்னை:சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார்.

தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட அப்துல்கலாம் புக் ஆஃ ரெக்கார்டில் இடம் பெற்றிருந்த மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி பேசினார். அப்போது, "தான் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. அதில் ஒரு பள்ளி மாணவர் தன்னை மேடைக்கு பேச அழைத்தது இதுதான் முதல் முறை எனவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், இங்கு சாதனை படைத்துள்ள மாணவர்களை பார்க்கும் பொழுது பிரமிப்பாக உள்ளதாக கூறிய அவர், எந்தத் துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெறலாம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும் அவர்களின் திறன் வளர்ச்சி என்பது அதிகமாகவே இருக்கிறது.

’அரசு பள்ளியைத் தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன்

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தன்னிடம் அதிக அளவில் கேள்வி கேட்கின்றனர் எனவும் அவர்களுக்கு அதற்குரிய திறன் அதிகளவில் இருப்பதாக முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர் என்றார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அரசு பள்ளியில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்க விஞ்ஞானி அறிஞர்கள் போன்றவர்கள் உதவிட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

’அரசு பள்ளியைத் தத்தெடுக்க உள்ளேன்..!’ - நடிகர் ஆரி அர்ஜுனன்

அதனைத் தொடர்ந்து ’பிக் பாஸ்’ புகழ் நடிகர் ஆரி அர்ஜுன் பேசும்பொழுது, ”படித்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். நான் பத்தாம் வகுப்பில் தவறிவிட்டேன் . அனைவரும் கல்வி கட்டாயம் படித்திருக்க வேண்டும். கல்வி கற்பதால் வாழ்வில் பெரிய இலக்கை அடையலாம். நான் சமீபத்தில் பிரான்ஸ் சென்று இருந்தேன் அப்போது அந்த நாட்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். ஏழை எளிய மக்களுக்கு கல்வியும் அதன் திட்டங்களும் போய் சேர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆரி அர்ஜுன், ”ஒரு நாட்டில் கல்வித்துறை சிறப்பாக இருந்தால் பொருளாதாரம் உள்ளிட்ட பிற துறைகள் தானாக வளரும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு தொலைநோக்கு திட்டங்கள் பலவற்றை வைத்துள்ளது.

எல்லோருக்கும் இரண்டு கண்கள் உள்ளது. மூன்றாவது கண்ணாக கல்வி இருக்கிறது. அதேபோல் ஒரு மாநிலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சிறப்பாக செயல்படக்கூடிய முதலமைச்சர் இருக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்டு வரும் நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள். மேலும் பொருளாதாரத்தை முன்னேற்ற பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர்.

தமிழ் நாட்டின் கல்வித் துறை வளர்வதற்கு அரசு பள்ளிகளில் நாம் அனைவரும் தத்தெடுத்த நம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும். அதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும் வகையில் விரைவில் அரசுடன் இணைந்து பள்ளிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். ஒவ்வொருவரும் அதனை செய்ய வேண்டும்” என ஆரி அர்ஜுனன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திய சூர்யா

ABOUT THE AUTHOR

...view details